வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்.


கருப்பட்டி உடல் நலத்திற்கு மிகவும் நன்மைகளை தருகிறது. அவை பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக செயல்படுகிறது. நோய்களை குணமாக்கும் அவ்ற்றின் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்போம். பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.
இது சத்துக்கள் நிறைந்தது. மிக மோசமான வியாதிகளைத் தரும் வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை உபயோகித்தால் பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கும். கருப்பட்டியைக் கொண்டு செய்யப்படும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் ஆயுள் அதிகரிக்கும்..
அவற்றை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளை காண்போம்.
பருவமடைந்த பெண்களுக்கு :பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து களி செய்து கொடுத்தால்… இடுப்பெலும்பு பலம் பெறும். கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனி பளபளப்பு பெறும்.
பசியின்மைக்கு : சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.
இருமல் மற்றும் ஜலதோஷத்திற்கு : குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.
எலும்புகள் பலப்பட : கருப்பட்டியில் கால்சியம் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியும் உண்டு. இதனை சர்க்கரைக்கு பதிலாக உபயோகித்தால் மிகவும் நல்லது. குறிப்பாக கருப்பட்டி காபி உடலுக்கு மிலவும் பலத்தை தரும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு :சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.

Comments

Popular Posts