வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எளிய டிப்ஸ்!
வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எளிய டிப்ஸ்!
தவறான உணவு பழக்கம் காரணமாக நீங்கள் வயிற்றுப்போக்கு, குமட்டல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சந்தித்திருக்கலாம். உங்கள் உணவு பழக்கத்தை மாற்றுவதன் மூலம் இதில் இருந்து நிவாரணம் பெறலாம்.
இந்த அறிகுறிகளில் இருந்து தப்பிக்க இங்கே சில டிப்ஸ்கள்
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள்: நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். உங்கள் தினசரி உணவுகளில் பச்சை காய்கறிகளையும் பருவகால பழங்களையும் சேர்ப்பதன் மூலம் உணவில் நார் அதிகரிக்கும். உங்கள் உணவில் தானியங்கள், ஓட்ஸ், பல தானிய மாவு போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்! கொழுப்பு நிறைந்த உணவுகள் உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். அதிக அளவு எண்ணெய் உள்ள உணவுகள், பழைய எண்ணெய்யில் செய்யப்பட்ட உணவுகள் உடலுக்கு பல பிரச்சனைகளை தரும். எனவே, வேக வைத்த உணவுகள், தீயில் வாட்டப்பட்ட உணவுகளை மாற்றாக எடுத்துக்கொள்வது சிறந்தது.
கோழி இறைச்சி: கோழி மற்றும் மீன் ஆகியவற்றில் ஆட்டு இறைச்சியுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவு கொழுப்பு காணப்படுகிறது. இது எளிதில் செரிக்கப்படுகிறது. புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் தினசரி தேவைக்காக சாலடுகள் வடிவில் கோழி மற்றும் மீன் வகைகளை முயற்சி செய்யலாம்.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்:நமது செரிமான அமைப்பு நல்ல பாக்டீரியாக்களை கொண்டுள்ளது. அவை செரிமானம் மற்றும் சிறந்த ஊட்டச்சத்து உறிஞ்சுதலில் மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன.
ஒழுங்கான இடைவெளிகள்: ஒரு ஆரோக்கியமான உணவு பழக்கம் என்பது, எப்போதும் நேரம் மற்றும் வழக்கமான இடைவெளியில் சாப்பிட வேண்டும். இது குடலை பாதுகாக்கும். ஊட்டச்சத்துக்களை அதிகமாக உறிஞ்கிறது. இது எடையைக் கட்டுப்படுத்துவதில் உதவுகிறது மேலும் வளர்சிதை மாற்ற வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.
நீர்: உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதில் உதவுகிறது, மேலும் ஒரு மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. நீரை சுத்தப்படுத்தி, வடிகட்டி பருக வேண்டும். இல்லையெனில் அசுத்தமடைந்த தண்ணீர் குடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
பதப்படுத்தப்பட்ட மற்றும் ஜன்க் உணவு: நகரமயமாக்கல் மற்றும் உணவு தொழில்நுட்ப முன்னேற்றத்தால், நாம் பதப்படுத்தப்பட்ட மற்றும் ஜன்க் உணவை அதிக அளவில் சாப்பிடுகிறோம். இதில் மைதா கலந்திருப்பதால், மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
நன்றாக மென்று சாப்பிட வேண்டும்: எந்தவொரு திசை திருப்பமும், மன அழுத்தம் இல்லாமல் உணவின் சுவையை அனுபவித்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அதிக அளவு உணவை ஒரே முறை உண்பதை விட, கொஞ்சம் கொஞ்சமாக உணவை சாப்பிடுவது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. அளவாக சாப்பிடுவது ஆரோக்கியத்தை தரும். மது, தேநீர், காபி மற்றும் பேக்கேஜ்ட் பானங்கள் ஆகியவற்றை தவிர்க்கவும். அவை சத்துக்களை உறிஞ்சுவதில் பிரச்சனையை ஏற்படுத்தும். சாப்பிடும் போது கவனச்சிதறலை தவிர்க்க வேண்டும்.
Comments
Post a Comment