திடீரென எழுந்து நின்றதும் தலை சுற்றுகிறது. நான் கவலை பட வேண்டுமா?

திடீரென எழுந்து நின்றதும் தலை சுற்றுகிறது. நான் கவலை பட வேண்டுமா?

உங்களின் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் பொழுது நீங்கள் எழுந்து நின்றால், இரத்தமானது இரத்த நாளங்கள் வழியாக மூளைக்கு எடுத்து செல்ல சிறிது நேரம் எடுக்கும். எனவே நீங்கள் தலை சுற்றுவதை போல் உணரலாம்.

இதுவே தொடர்ச்சியாக நடைபெற்றால் நீங்கள் உங்களது இரத்த அழுத்தத்தை நிற்கும் பொழுதும், அமரும் பொழுதும், உறங்கும் பொழுதும் பரிசோதித்துக்கொள்ளவும்.

மேலும் எழுந்து நிற்கும் பொழுது உள்ள இரத்த அழுத்தம், உறங்கும் பொழுது உள்ள இரத்த அழுத்தத்தை விட தொடர்ந்து குறைவாக இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும். அவ்வாறு இல்லாமல் இரத்த அழுத்தம் தொடர்ந்து குறைவாக இருப்பின் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளவும்.

இரத்த அழுத்தம் தொடர்ந்து குறைவாக இல்லை எனில் உங்களுக்கான ஒரு சிறந்த அறிவுரை உறங்கும் நிலையிலிருந்து எழுந்து நிற்கும் பொழுது சிறிது நேரம் எடுத்துக்கொள்ளவும். ஏனெனில் உறங்கும் பொழுது உங்களின் இரத்த அழுத்தமானது இரவு முழுவதும் தொடர்ச்சியாக குறைவாக இருக்கும்.

எனவே  தூக்கத்திலிருந்து எழும் பொழுது 30 முதல் 60 வினாடிகள் வரை அமர்ந்த பிறகு எழுந்திருக்கவும்.

Comments

Popular Posts