சனி பெயர்ச்சி மற்றும் 2018 புத்தாண்டு பலன்கள் – வடிவேலு பாணியில்
மேஷம்

சூரியன் – தங்களுக்கு இதுவரை தடைக் கல்லாக விளங்கி வந்த காரியங்கள், முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாறி வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலைகள் மேம்படும். பல வழிகளிலும் பணம் காசு பொருள் சேரும். ஒளிர்கின்ற சூரியன் போல் பலவிதத்திலும், உங்கள் புகழ் ஒளி பரவும். வியாபாரத்திற்கான வங்கிக் கடன்கள், அரசு தொழில் துறைமூலமாக எளிதாகக் கிடைக்கும். கடன்களும் கட்டுக்குள் இருக்கும். அரசுத்துறையால் ஆதாயம் உண்டு. சிலருக்கு உடனடியாக அரசில் புதிய வேலைகிடைக்கும். மாதத்தில் தந்தையுடனான கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தொழிலில் இதுவரை எவராலும் அடைய முடியாத லாபங்களை சம்பாதித்து, புதிய புதிய சாதனைகளைப் படைத்து
ரிஷபம்

பணம் காசு சேர்ந்து செல்வ நிலை உயரும்.நினைத்த காரியங்கள் நினைத்தபடி தடையின்றி நிறைவேறும். மற்றவர்களின் விவகாரங்களில் தேவையின்றி மூக்கை நுழைக்காதிருப்பது நல்லது. புத்திரபாக்கியம் ஏற்படும். ஆரோக்கியம் பெருகும். நோயற்ற வாழ்வு மலரும். ஞானம் மேலிடும். மாசி மாதத்தில் தொழிலில் புதிய விரிவாக்கத் திட்டங்கள் நிறைவேறும், அரசுப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வுகள் ஏற்படும்.புதிய உயர்ரக வாகன சுகங்கள் கிடைக்கும். பங்குனி மாதத்தில் அரசியல்பிரபலங்களின் ஆதரவு கிட்டும். பொது ஜன சேவைகளால் மதிப்பு மரியாதைகூடும். புகழும் ஓங்கும்.
மிதுனம்

கல்விக்காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனராசி அன்பர்களே!தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப்பார்ப்போம். சூரியன்: தானதருமங்கள் செய்யும் அளவுக்குச் செல்வநிலை உயரும். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என பாடும் நிலைக்கு உயர்வீர்கள். எனவே, எந்த முயற்சியிலும் துணிந்து இறங்கி முன்னேற்றம் காணலாம். அரசுத் துறையால் இலாபம்அல்லது அரசில் வேலைவாய்ப்பு ஆகியவை ஏற்படலாம். மாதத்தில்பணம் காசு சேரும். எவரும் சாதிக்க முடியாத சாதனைகளைப் புரிவார்.நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். சித்திரை மாதத்தில் சிறந்த வாகனயோகம்ஏற்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்.
கடகம்

தாய்காரகனான சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே!தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப்பார்ப்போம். சூரியன்: விருப்பமானவர்களுடன் உறவு ஏற்படும். தமக்குப் பிடித்தமான இடத்துக்கு வேலைமாற்றம் ஏற்படும். விரும்பிய இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கும். அரசாங்க முக்கியஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும். கல்வியில் வெற்றி, அரசுத்துறையில் இலாபம் ஏற்படும். மிக்க சுகம் உண்டாகும்.வாழ்க்கையில் அதிர்ஷ்டமயமான நல்ல திருப்பங்கள்ஏற்படும். பிறர் மேல் இரக்கம் கொள்வார். சுபகாரியங்கள் எண்ணியது எண்ணியபடி நடக்கும்
சிம்மம்

முதலில் மனைவியுடன் ஏற்படும் பிணக்குகளினால் தற்காலிகப் பிரிவு ஏற்படலாம்.பின்னர் இருவரும் ஒன்று கூடி மகிழ்வீர்கள். உதவி கேட்டுப் போகும் போது யார் உண்மையான நண்பர்கள் என்பது தெரியவரும். வியாபாரத் தொடர்பான, நெடுந் தூரப் பயணங்களால் இலாபம் ஏற்படும். புதிய விரிவாக்கத்திட்டங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தரும சிந்தனையால்,கோவில் மற்றும் குளங்களுக்குத் திருப்பணி செய்வீர்கள்.
கன்னி

கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தனித்திறமையால் வாழ்வில் பணம் சம்பாதிக்கும் நிலை ஏற்படும். எவருமே இதுவரைசெய்யாத சாதனைகளைப் புரிவீர்கள். உயர் பதவிகள் கிடைத்துஅந்தஸ்து, மரியாதையும் கூடும். உங்களுக்கு மிகவும் விருப்பமானவர்களின் அன்பு அதிகமாகும். புத்திரபாக்கியம் ஏற்படும். உங்களுக்கு இதுவரை வராது இருந்த நிலுவைகள், கடன்கள்,விரைவில், சுலபமாக வசூலாகும். செவ்வாய் – தொழில்களில் நல்ல வருமானம் ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி அடையும். சிலருக்குக் கண்நோய் ஏற்படலாம். விவாகம் நடக்கும். சந்ததி விருத்தியாகும். ஆண்டின் இறுதியில் பற்றாக்குறைகள்அதிகமாகும்.
துலாம்

தங்களுக்கு வாழ்க்கையில் வெற்றி மேல்வெற்றி கிட்டும். தங்கள் கல்வித் தகுதி, திறமைக்கு ஏற்ப நல்ல சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கையில் சந்தோஷம், செல்வம் ஆகியவை ஏற்படுகின்றன. புதிய பதவிகளின் சொகுசை, மகிழ்ச்சியை அனுபவிக்கும் காலம். தனலாபம், மரியாதை மற்றும் முன்னேற்றங்கள் உண்டாகும். வாழ்க்கையில் சிறப்பு மிக்க மரியாதைகளும், நல்ல மனிதர்களின் நட்பும் கிடைக்கும். மனஅமைதி, இலாபம் மற்றும்உயர்பதவிகள் குறிகாட்டப்படுகின்றன.
விருச்சிகம்

திரிகளை வென்று, வெற்றி மேல்வெற்றி அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். நல்ல நண்பர்களின் நட்பால் மகிழ்ச்சி உருவாகும். அலுவலகத்தில் உயர்அதிகாரிகளின் பரிபூர்ண ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்தைவிட தனவரவு ஏற்பட்டு, குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். மலையென அந்தஸ்து உயரும். இரக்க குணம் அதிகரித்து தானதர்மம் செய்வீர்கள். செவ்வாய்: கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சுற்றுவட்டாரத்தில் மதிப்பு,மரியாதைகள் கூடும். கூடுதலான தன வருமானத்தால் பணப்புழக்கம் சிறப்பாகஇருக்கும். திருமணம், மக்கட்பேறு என வாழ்வின் மகிழ்ச்சிகரமானதருணங்களாக அமையும். சிறு விபத்துக்கள்,காயங்கள் ஏற்படலாம். கோபத்தால் காரியங்கள்கெடலாம். எல்லாத் துறைகளிலும் இலாபம் ஏற்படும்.
தனுசு

வைகாசி மாதத்தில் வராத கடன்கள் அனைத்தும் வசூலாகும். எதிரிகளின் தொல்லை ஓரளவு குறையும். அரசின்உதவியால் செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அதிகாரிகளின்அனுசரணையால் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வாகனம் போன்றவற்றில்முதலீடு செய்யலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதரரால்நன்மை உண்டு. செவ்வாய்: சந்தோஷமும், சௌகரியங்களும் பல்கிப்பெருகும். தடைக் கற்கள் எல்லாம் படிக் கற்களாக மாறும். எடுத்து வைக்கும்ஒவ்வோர் அடியும் வெற்றிப் படியாக இருக்கும். அதைத் தொடர்ந்து வரும்காலங்களில் வெளிநாட்டுப் பயணங்களால் இலாபம் கிடைக்கும்.
மகரம்

நல்ஆரோக்கியம், சந்தோஷம், மனஅமைதி, இலாபம் ஆகியவை ஏற்படும். எதிர்பாராத வெற்றிகள் கிடைத்து உள்ளம் மகிழும். மேற்கொள்ளும் புதியதொழில் முயற்சிகள் எதிர்பார்ப்புக்கு மேலான வெற்றிகளைத் தரும்.பொதுச்சேவை செய்பவர்களுக்குச் சுற்று வட்டாரத்தில் புகழ் பரவும். அரசுப் பணிகளில் புதிய பதவி உயர்வு மற்றும் அந்தஸ்து கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். செவ்வாய்: வருட ஆரம்பத்தில் பொருளாதார இலாபம் ஏற்படும். அரசுப்பணியாளர்களுக்குத் தங்கள் தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும்.பூமிலாபம், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை மற்றும் நவநாகரீக, நவீன சுகசாதனங்களோடு வீடு நிறைந்திருக்கும். பின்னர் உணர்ச்சி மிகுதல், பெண்களால்தொல்லை, அதிக வெப்பத்தால் வரும் வியாதிகள் ஆகியவை ஏற்பட்டு சிறிது இன்னல் தரும்.
கும்பம்

காரியங்கள் யாவும் வெற்றியின் திக்கை நோக்கியே செல்லுவதால், அச்சமின்றி அனைத்துக் காரியங்களிலும் ஈடுபடலாம்.வங்கிக் கடன் வாங்கி வீடு, நிலம் வாங்கும் பாக்கியம் ஏற்படும். படிப்பில் அதிகஅக்கறை தேவை. வெகுதூரப்பயணங்களை தவிர்ப்பது நல்லது.தொழில் விருத்தி உண்டு. பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. தெய்வ வழிபாடுகள் மனநிம்மதி தரும். செவ்வாய் : வருட ஆரம்பத்தில் தொழில் முன்னேற்றங்களால்பொருளாதார நிலை மிகவும் திருப்திகரமாக இருக்கும். வசதிகள் அனைத்தும்நிரம்பிய அழகிய வீடு அமையும். பின்னர் வரும் காலத்தில் எல்லாக்காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். அரசு சம்பந்தமான வேலைகள்அனைத்தும் தாமதமின்றி நிறைவேறும். வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்பட்டு, ஆனந்தம் பொங்கும்.
மீனம்

டல் ஆரோக்கியம் உன்னதமாக இருக்கும். தொழில் நிலைகள் மேம்படும். அரசு மூலமாக சிறந்த சேவைக்காகசிறப்பான கௌரவங்கள் வந்து சேரும். நோய்கள் குறைந்து ஆரோக்கியம் பெருகும். மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வெற்றி மேல் வெற்றிகள் குவியும், எடுக்கும் காரியங்கள் அனைத்தும்சிறப்பாகவே முடியும். புதிய பதவி, கௌரவம் மற்றும்அதனால் ஏற்படும் சந்தோஷம் ஆகியவற்றைத் தருவார். செவ்வாய்: புதிய முயற்சிகள் மற்றும் விஐ.பி களின் ஆதரவால், எதிர்காலத் திட்டம் எனும் காய் கனிந்து, சுவைதரும் காலம் கண்ணுக்குத்தெரியும். சிலர் தேவையற்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவர்.
Comments
Post a Comment